January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கை வருவது உறுதி’; அர்ஜுன டி சில்வா

பங்களாதேஷில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக நாடு முழுவதும் முடக்கல் நிலைமை அமுலில் இருந்தாலும் அந்நாட்டு கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம் செய்யும் என இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவ குழுவின் தலைவர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் ஒரு வாரம் நாடு தழுவிய முடக்கத்துக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.ஆனால் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி திட்டமிட்டபடி இலங்கை சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் எனவும் பங்களாதேஷ் அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளதாக அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி தொடங்கும் என்றும் இரண்டு போட்டிகளும் கண்டியில் நடைபெறும் என்றும் அர்ஜுன டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.