May 27, 2025 22:49:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

படிக்கல், கோலி அபாரம்: ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூர்

Photo: BCCI/ IPL

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டு ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிராக பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் சிறப்பானதொரு வெற்றியை ஈட்டியது.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடிய போதிலும் எதிரணியின் சகலதுறை ஆட்டம் பெங்களூர் அணிக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்தது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களைப் பெற்றது.

Photo: BCCI/IPL/RR

அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், சஞ்சு செம்ஸன் ஆகியோர் சொற்ப ஓட்டங்க ளுடன் ஆட்டமிழந்தனர். ஜோஸ் பட்லர் 22 ஓட்டங்களையும், ரொபின் உத்தப்பா 17 ஓட்டங்களையும் பெற்றனர். எம்.கேலொம்ரோ 3 சிக்ஸர்களுடன் 47 ஓட்டங்களைப் பெற்றார். ஆர்.டிவேட்டா 24 ஓட்டங்களையும், ஜொப்ரா ஆச்சர் 16 ஓட்டங்களையும் பெற்றார்.

யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளையும், இலங்கைளின் இசுரு உதான 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


நீண்ட இடைவெளியின் பின்னர் பிரகாசித்த கோஹ்லி
பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 25 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. ஏரோன் பிஞ்ச் 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

என்றாலும் அடுத்து இணைந்த டெவ்டுட் படிக்கல் மற்றும் அணித்தலைவர் விராத் கோஹ்லி ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி வெற்றியை உறுதிசெய்தது.

Photo: BCCI/ IPL

கடந்த சில ஆட்டங்களில் பிரகாசிக்கத் தவறிய விராத் கோஹ்லி அரைச்சதமடித்து வெற்றியை உறுதி செய்தார். பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 19.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றியை அடைந்தது.

அணித்தலைவர் விராத் கோஹ்லி 53 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 72 ஓட்டங்களையும், ஏபி டிவிலியர்ஸ் 12 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த வெற்றியுடன் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 4 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் இரண்டாமிடத்தில் இருக்கிறது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் ஆறாமிடத்திலுள்ளது.