January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று: சச்சின் டெண்டுல்கர் மும்பை மருத்துவமனையில் அனுமதி

கொரோனா தொற்றுக்குள்ளாகி வீட்டில் சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ ஆலோசனையின் கீழ், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மும்பை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாக சச்சின் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

சச்சின் உட்பட வீதி பாதுகாப்பு இருபது 20 கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்ட இந்திய லெஜண்ட்ஸ் அணி வீரர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

‘சில தினங்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப எதிர்பார்ப்பதாகவும்’ சச்சின் தெரிவித்துள்ளார்.

மும்பை நகரில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதுடன், இந்தியாவில் நேற்று 81,466 புதிய கொவிட் நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம், 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியனாகி 10 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவுகூர்ந்துள்ள சச்சின், இந்தியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.