January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹேட்ரிக் வெற்றி கிட்டுமா டெல்லிக்கு?முதல் வெற்றிக்காக காத்திருக்கும் ஹைதராபாத்!

ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கெபிடெல்ஸ் அணி தனது மூன்றாவது ஆட்டத்தில் இன்று டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கின்றது.

டெல்லி அணி ஏற்கனவே பஞ்சாப் அணியை சூப்பர் ஓவரிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் வீழ்த்தி இரண்டு வெற்றிகளை ஈட்டியுள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் ஹெட்ரிக் வெற்றியை அடையமுடியும்.

Photo: BCCI/Delhi Capitals

இவர்களுடன் பின்வரிசையில் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மேற்கிந்தியத் தீவுகளின் ஸிம்ரோன் ஹெட்மயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளமை டெல்லி அணியை மேலும் பலப்படுத்துகின்றது.

அக்ஸார் பட்டேல்,தென் ஆபிரிக்காவின் கெகிஸோ ராபாடா, அன்ரிஜ் நோர்ட்ஜி எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு கடந்த போட்டிகளில் பெரும் அச்சுறுத்தல் விடுத்த வீரர்களாக உள்ளனர்.

எதிர்பார்ப்புக்கு மத்தியில் சன்ரைசர்ஸ்

மறுபக்கம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் பெரும் எதிர்பார்ப்புமிக்க வீரராக டேவிட் வார்னர் காணப்படுகின்றார். அவரது அதிரடியை நம்பியே அணி இருக்கிறது.

பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளிடம் தோல்வியடைந்த சோகத்தில் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது.

இங்கிலாந்தின் ஜொனி பெயார்ஸ்டோவ், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்ஸன் கூட்டணி பிரகாசித்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஓட்டங்களைக் குவித்து எதிரணிக்கு சவால் விடுக்கமுடியும்.

Photo: BCCI/SunRisers Hyderabad

இந்தியாவின் அதிரடி வீரரான மணிஸ் பாண்ட்டே அணியில் இடம்பெற்றுள்ள போதிலும் அவர் கடந்த ஆட்டங்களில் பெரிதாக பிரகாசிக்கவில்லை.

பந்து வீச்சைப் பொறுத்தமட்டில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஸிட் கான் நம்பிக்கைக்குரிய வீரராகத் திகழ்கிறார்.

புவனேஸ்வர் குமார் வேகப்பந்து வீச்சில் உந்துசக்தி அளிக்கக்கூடிய வீரர்.

எனினும், இவர்கள் கடந்த ஆட்டங்களில் பெரிதாக எதனையும் சாதிக்காததே சன்ரைசர்ஸ் அணி தோல்வியடையக் காரணமாகும்.

எனவே, இன்று இவர்கள் அதீத ஆற்றலை வெளிப்படுத்தினால் சன்ரைசர்ஸ் அணியால் நம்பிக்கையுடன் விளையாட முடியும்.