July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமிந்த வாஸின் இராஜினாமா முடிவு ஏமாற்றமளிக்கிறது என்கிறார் நாமல்!

Namal

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்க நான்கு மணி நேரத்திற்கு முன்னர் சமிந்த வாஸ் தமது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தமை ஏமாற்றமளிப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவருக்கான கொடுப்பனவுகள் குறித்து எந்தவித பிரச்சினையும் இல்லை, ஆனால் அதனை கேட்பதற்கு ஒரு வழிமுறை உள்ளது, இறுதி நேரத்தில் அவர் முன்வைக்கும் கோரிக்கைக்கு  இணங்கினால் நாளை இதுவே வேறொரு விளையாட்டு வீரரோ அல்லது பயிற்றுவிப்பாளரோ அதே வழியை பின்பற்ற காரணமாகும் எனவும்  அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அவருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அப்பால் சுற்றுப்பயண கொடுப்பனவுகளையும் விட மேலதிகமாக இந்த சுற்றுப்பயணத்திற்காக மாத்திரம் ஏழரை இலட்சம் ரூபா வழங்க தீர்மானித்தும் அவர் நாளாந்தம் மேலதிகமாக 200 டொலர்களை கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளதென விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இப்படியான சந்தர்ப்பங்களில் இறுதியில் அணியே நெருக்கடியில் விழும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நேற்றைய தினம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த சமிந்த வாஸ் சுற்றுப்பயணம் ஆரம்பமாகவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.