இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை உபுல் தரங்க, பதிவிட்டுள்ளார்.
‘அனைத்து நல்ல விடயங்களும் முடிவுக்கு வர வேண்டும்’ என்ற பழமொழியை மேற்கோளிட்டுள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தாம் விடை பெறுவதற்கான சரியான தருனம் இது எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அன்பான நினைவுகளையும் சிறந்த நண்பர்களையும் தந்த ஒரு பயணித்திலிருந்து தாம் விலகி செல்வதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இலங்கை கிரிக்கெட் சபைக்கும், மற்றும் அனைவருக்கம் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் உபுல் தரங்க, 31 டெஸ்ட் போட்டிகள், 235 ஒருநாள் மற்றும் 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் இரு சதங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/upultharanga44/status/1364144648063619074?s=19