February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அறுகம் குடாவில் தேசிய அலைச்சறுக்கு போட்டி!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அறுகம் குடா (Arugam Bay) கடற்கரையில் சர்வதேச மட்டத்திலான கடல் அலைச்சறுக்கு (Surfing) போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

இந்தப் போட்டிகளை இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சுடன் அலைச்சறுக்கல் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கை, அவுஸ்திரேலியா, இஸ்ரேல், ஆர்ஜன்டீனா, ஜேர்மனி, ரஷ்யா, ஸ்பெயின், தென்னாபிரிக்கா, போலந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் அலைச்சறுக்கு விளையாட்டு வீரர்களும் இந்தப் போட்டியில் பங்கெடுத்துள்ளனர்.

(படங்கள்: நன்றி-இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சு)