பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓட்டங்களைக் குவிக்கும் முயற்சியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஈடுபட்டுள்ளது.
டாக்காவில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் அணித்தலைவருமான கிரெக் பிரத்வைட் 112 பந்துகளை எதிர்கொண்டு 47 ஓட்டங்களைப் பெற்றார்.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ருமா பொனர் 173 பந்துகளில் 6 பௌண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களைப் பெற்றார். ஜோம் கெம்பல் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்களை பெற்றிருந்த போது முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.
அபு ஜாயெட், தய்ஜுல் இஸ்லாம் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றியை நெருங்கிய நிலையில், அபாரமாகவும் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடிய கைல் மேயர்ஸ் வெற்றியை தமது அணிக்கு ஈட்டிக்கொடுத்தார். தொடரில் 1-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.