October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முதல் சர்வதேச இருபது 20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதல் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 ஓட்டங்களால் வெற்றியை ஈட்டியது.

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ள தென் ஆபிரிக்கா டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், சர்வதேச இருபது 20 தொடர் ஆரம்பமாகியுள்ளது.

லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானுக்கு ஆரம்பமே அச்சுறுத்தலாக இருந்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் அணித்தலைவர் பாபர் அசாம் துரதிர்ஸ்டவசமாக ரன்வுட் ஆனார்.

ஹெய்தர் அலி 21 ஓட்டங்களையும், ஹு ஸெய்ன் டலாட் 15 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். அபாரமாக துடுப்பெடுத்தாடிய மொஹமட் ரிஸ்வான் 104 ஓட்டங்களை விளாசினார். 64 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 104 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலளித்தாடிய தென் ஆபிரிக்க அணி சார்பில் ஜென்னமென் மாலன் 44 ஓட்டங்களையும், ரெஸா ஹென்ரிக்ஸ் 54 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்களால் பிரகாசிக்க முடியவில்லை.