
துபாயில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான பரா மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கையின் குமுது பிரியங்கா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
மகளிருக்கான ரி 46 பிரிவு நீளம் பாய்தல் போட்டியில் அவர் இந்தப் பதக்கத்தை வென்றார்.
ரி46 பிரிவு என்பது ஒரு கையை இழந்த அல்லது பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கான போட்டியாகும். இதில் 8 தசம் 9 மீற்றர் தூரத்துக்கு குமுது பிரியங்கா ஆற்றலை வெளிப்படுத்தினார். இதன் மூலம் அவருக்கு மூன்றாமிடம் கிடைத்தது.
மாற்றுத் திறனாளிகளுக்கான பரா மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கை சார்பாக 6 வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 12 ஆவது தடவையாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.