July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்திடம் மண்டியிட்டது இந்தியா

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 227 ஓட்டங்களால் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஈட்டியது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி நாளில் இந்தியா வெற்றிபெற மேலும் 381 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன், கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன. இதனால் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடிக்க இந்தியா முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும், இங்கிலாந்து வீரர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. ஐந்தாம் நாளில் ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ஓட்டங்களுடன் இந்திய அணி இரண்டாம் இனிங்ஸை தொடர்ந்தது.சுப்மன் கில் 15 ஓட்டங்களோடும், செட்டிஸ்வர் புஜாரா 12 ஓட்டங்களோடும் களமிறங்கினர்.

செட்டிஸ்வர் புஜாரா 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 50 ஓட்டங்களுடனும், அஜின்கெயா ரஹானே ஓட்டமின்றியும் வெளியேறினர். ரிஸப் பாண்ட், வொஸிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர்.

தனி ஒருவராகப் போராடிய அணித்தலைவர் விராத் கோஹ்லி 72 ஓட்டங்களைப் பெற்றார்.

192 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி இழக்க 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 72 ஓட்டங்கள், சுப்மன் கில 50 ஓட்டங்கள் எடுத்தனர்.

அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று அசத்திய இந்திய அணி, சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.

இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் போட்டிகளுக்கான புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.