July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஸ்வின் புதிய சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை படைத்தார். 34 வயதான அவருக்கு இது 75 ஆவது டெஸ்ட் போட்டியாகும்.

75 டெஸ்ட் போட்டிகளில் அவர் 386 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் 75 டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இரண்டாவது வீரராகப் பதிவானார்.

அஸ்வின் தென் ஆபிரிக்காவின் டேல் ஸ்டெய்னை முந்தினார். ஸ்டெய்ன் 75 டெஸ்ட் போட்டிகளில் 383 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இலங்கையின் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 420 விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை அஸ்வின் பிடித்துள்ளார்.

அஸ்வின் 28-வது முறையாக இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் 75 டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய வீரர்களில் இலங்கையின் ரங்கன ஹேரத்துடன் இணைந்து அஸ்வின் மூன்றாமிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

75 டெஸ்ட் போட்டிகளில் முத்தையா முரளிதரன் 35 முறையும், நியூஸிலாந்தின் ரிச்சர்ட் ஹெட்லி 33 முறையும் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தி முதலிரண்டு இடங்களை வகிக்கின்றனர்.

அஸ்வின் சேப்பாக்கம் மைதானத்தில் 3 வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார். ஏற்கனவே அவர் மும்பை, ஐதராபாத், டெல்லி ஆகிய மைதானங்களில் 3 தடவை 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.