January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனவரி மாதத்தின் அதிசிறந்த வீரர் ரிஷப் பாண்ட்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ள மாதத்தின் அதிசிறந்த வீரர் விருதை முதலாமவராக வென்றவர் என்ற சிறப்பை இந்தியாவின் ரிஷப் பாண்ட் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் மாதத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரரை தெரிவுசெய்து விருது வழங்கி கௌரவிப்பதென கடந்த வருட இறுதியில் தீர்மானித்தது. ஒவ்வொரு மாதமும் போட்டிகளில் வீரர்கள் வெளிப்படுத்தும் ஆற்றல்கள் கவனத்திற்கொள்ளப்படும்.

இறுதியில் மூன்று வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வாக்கெடுப்பின் பிரகாரம் விருதுக்குரிய வீரர் தெரிவுசெய்யப்படுவார். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தின் அதிசிறந்த வீரர் விருதுக்கு இந்தியாவின் ரிஷப் பாண்ட், இங்கிலாந்தின் ஜோ ரூட், அயர்லாந்தின் போல் ஸ்ரேலிங் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

அந்த மூன்று வீரர்களில் ரிஷப் பாண்ட் விருதுக்கு தெரிவாகியுள்ளார். அவுஸ்திரேலிய மண்ணில் இந்தியா வரலாற்று வெற்றியை ஈட்டுவதற்கு அவர் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.