January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சாதனை படிக்கட்டுகளில் ஜோ ரூட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் சாதனைப் படிக்கட்டுகளில் தடம்பதித்து பல சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார். தன்னுடைய 100 ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் வீரராக ஜோ ரூட் பதிவானார்.

194 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது சிக்ஸர் ஒன்றை விளாசிய அவர் அதன்மூலம் 200 ஓட்டங்களை எட்டினார். 100 ஆவது டெஸ்டில் இரட்டை சதமடித்த முதல் வீரராக ரூட் திகழ்கிறார்.

அத்துடன், பாகிஸ்தான் முன்னாள் வீரரான இன்சமாம் உல் ஹக் வசமிருந்த 100 ஆவது போட்டியில் அதிகபட்சமாக 184 ஓட்டங்கள் உலக சாதனையையும் ஜோ ரூட் தகர்த்தெறிந்தார்.

100 டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கரின் 8045 ஓட்டங்கள் சாதனையை ஜோ ரூட் முறியடித்தார். இதேநிலை நீடித்தால் இங்கிலாந்து சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகும் சாதனையை ஜோ ரூட் நெருங்கியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக இரட்டை சதமடித்த ஜோ ரூட் தற்போது சாதனைகளின் உச்சத்தை அடைந்துள்ளார். இந்தப் பருவகாலத்தில் இரண்டு இரட்டை சதங்களை விளாசியுள்ளார்.

அதிக இரட்டை சதங்களைப் பெற்றவர்களின் சாதனைப் பட்டியலில் கிரிக்கெட்டின் பிதாமகர் சேர். டோன் பிரட்மன் 12 இரட்டை சதங்களுடன் முதன்னிலை வகிக்கிறார். குமார் சங்கக்கார 11 இரட்டை சதங்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.