July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெற்றி வாய்ப்பில் பங்களாதேஷ்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வெற்றிகொள்ளும் நிலைக்கு பங்களாதேஷ் உயர்ந்துள்ளது.

சட்டோகிராமில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 430 ஓட்டங்களைக் குவித்ததுடன் பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 259 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

171 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்தியது. அதன்படி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வெற்றி இலக்கு 395 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

அந்த இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 59 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளையும் இழந்தது. அணித்தலைவர் கிரெய்க் பிரத்வைட் 20 ஓட்டங்களுடனும், ஜோன் கெம்பல் 23 ஓட்டங்களுடனும், சாஹீன் மூசு 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிபெற கடைசி நாளில் மேலும் 285 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.