January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய பிக்பாஷ் லீக்; மூன்றாவது முறையாக சாம்பியனானது சிட்னி சிக்சர்ஸ்

அவுஸ்திரேலிய பிக்பாஷ் லீக் இருபது 20 கிரிக்கெட் தொடரில் பேர்த் ஸ்கொச்சர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது தடவையாக சிட்னி சிக்சர்ஸ் அணி சாம்பியனானது.

பிக்பாஷ் லீக் இருபது 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றது. போட்டியில் சிட்டி சிக்சர்ஸ் மற்றும் பேர்த் ஸ்கொச்சர்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பேர்த் ஸ்கொச்சர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை குவித்தது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜேம்ஸ் வின்ஸ் 60 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பௌண்டரிகளுடன் 95 ஓட்டங்களை விளாசினார்.
வெற்றி இலக்கான 189 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய பேர்த் ஸ்கொச்சர்ஸ் அணி சார்பாக கெமரூன் பென்க்ரொப்ட் 30 ஓட்டங்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆனாலும், ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட பேர்த் ஸ்கொச்சர்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்களையே பெற முடிந்தது.

இதற்கமைய 27 ஓட்டங்களால் வெற்றிபெற்ற சிட்னி சிக்சர்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் மகுடத்தை சுவீகரித்தது.

ஜேம்ஸ் வின்ஸ் இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் ஜோஸ் பிலிப் தொடரின் சிறந்த வீரராகவும் விருது வென்றனர்.