January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தும் எதிர்பார்ப்பில் பங்களாதேஷ்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வெற்றிகொள்ளும் எதிர்பார்ப்பு பங்களாதேஷிடத்தில் மேலோங்கியுள்ளது.

சுட்டகிரோமில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 430 ஓட்டங்களைக் குவித்தது. மெஹ்டி ஹசன் மிராஸ் 103 ஓட்டங்களைக் குவித்தார். ஜோமெல் வரிக்கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணியால் 259 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது. அணித்தலைவர் கிரெய்க் பிரெத்வைட் அதிகபட்சமாக 76 ஓட்டங்களைப் பெற்றார். ஜேர்மெய்ன் பிளக்வூட் 68 ஓட்டங்களையும், ஜோஸு வா டி சில்வா 42 ஓட்டங்களையும், கைல் மேயர்ஸ் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

மெஹ்டி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளையும், முடாபிஷர், தஜ்ஜுல் இஸ்லாம், நயீம் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

171 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஸத்மன் இஸ்லாம் 5 ஓட்டங்களுடனும், தமிம் இக்பால், நஜ்முல் இஸ்லாம் ஆகியோர் ஓட்டமின்றியும் ஆட்டமிழந்தனர்.

மொமினுல் ஹக் 31 ஓட்டங்களுடனும், முஷ்டகர் ரஹீம் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். பங்களாதேஷ் அணி 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த போது மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவை எட்டியது.

இதற்கமைய பங்களாதேஷ் அணி 218 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.