July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரவிந்த டி சில்வா தலைமையில் கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு!

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு ஒன்று அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டுத் துறையை தேசிய மற்றும் சர்வதேச ரீதியல் முன்னேற்றும் நோக்கில் இவ் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நான்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய இக் குழுவின் தலைவராக அரவிந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன் ரொஷான் மஹனாம, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டு அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தலைவர் ஆகியோருக்கு விளையாட்டின் வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை வழங்கத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பணிக்கப்பட்டுள்ளது.