July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் (எஸ்.எல்.சி) தேர்தல் மே மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான முக்கிய பதவிகளுக்கு வாக்கெடுப்புகள் இடம்பெறவுள்ளன.

தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி காலை 09.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள உறுப்பினர்களின் முதல் பட்டியல் 06ஆம் திகதி அறிவிக்கப்படும் என எஸ்.எல்.சி தெரிவித்துள்ளது.

இத் தேர்தலினூடாக தலைவர், பிரதித் தலைவர்கள், செயலாளர், உதவி செயலாளர், பொருளாளர், உதவி பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.