January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மே.தீவுகளுக்கான விஜயத்தை ரத்துச்செய்யும் நிலையில் இலங்கை

இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநரான மிக்கி ஆதர் மற்றும் அணி வீரர் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதால் மேற்கிந்தியத் தீவுகளுக்கான கிரிக்கெட் விஜயம் ரத்துச்செய்யப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தொடரை திட்டமிட்டபடி நடத்துவதா இல்லையா என இரண்டு நாடுகளின் கிரிக்கெட் அதிகாரிகளும் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் பெரும்பாலும் ஒத்திவைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி தற்போது பங்களாதேஷு க்கு விஜயம் செய்து விளையாடிவருகின்றது. இந்நிலையில் இரண்டு அணிகளுமே மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் செய்ய வேண்டியுள்ளதால் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஆரரயப்படுகிறது.

இதனால் மேற்கிந்தியத் தீவுகள் விஜயம் மற்றும் ஏனைய கிரிக்கெட் தொடர்களை இலங்கை பெரும்பாலும் ஒத்திவைக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.