July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மே.தீவுகளுடனான முதல் டெஸ்ட்; பங்களாதேஷ் நிதான ஆட்டம்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பங்களாதேஷ் அணி நிதானமாக ஆரம்பித்துள்ளது. சட்டகிரோமில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் பங்களாதேஷ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களை முதல் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சத்மான் இஸ்லாம் மற்றும் தமிம் இக்பால் ஜோடியால் பெரிதாக ஓட்டங்களைக் குவிக்க முடியவில்லை. தமிம் இக்பால் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

என்றாலும் சத்மான் இஸ்லாம் நிதானமாக துடுப்பெடுத்தாடி 154 பந்துகளில் 6 பௌண்டரிகளுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார். நஜிமுல் ஹுஸென் 25 ஓட்டங்களையும், அணித்தலைவர் மொமினுல் ஹக் 26 ஓட்டங்களையும், முஸ்பிகுர் ரஹீம் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஷகிப் அல் ஹஷன் 39 ஓட்டங்களுடனும், லிட்டன் டாஸ் 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். பங்களாதேஷ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஜொமைல் வரிக்கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாம் நாள் ஆட்டம் தொடரவுள்ளது.