January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயிற்சிகளை ஆரம்பித்தது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர். ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த பின்னர் இந்திய வீரர்களின் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. அணித்தலைவர் விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா, செட்டிஸ்வர் புஜாரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் களத்தடுப்பு பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளன. முதல் போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.

இதனிடையே இங்கிலாந்து குழாம் வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் மற்றொரு பிரிவாக பயிற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, முதல் போட்டியை மைதானத்தில் நேரடியாக கண்டுகளிக்கும் வாய்ப்பு 360 பேருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.