October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவின் தென் ஆபிரிக்க கிரிக்கெட் சுற்றுப் பயணம் ஒத்திவைப்பு

தென் ஆபிரிக்க சுற்றுப் பயணத்தை தாம் ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட தென் ஆபிரிக்காவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தது.

இந்த கிரிக்கெட் சுற்றுப் பயணம் எதிர்வரும் மாரச் மாதம் ஆரம்பமாக இருந்த நிலையிலேயே, ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது, தென் ஆபிரிக்காவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெறும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.