January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த இங்கிலாந்து வீரர்கள்

Photo: englandcricket_twitter

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து குழாம் முதல் அம்சமாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி வீரர்கள் இந்தியாவில் உயர் பாதுகாப்பு வலயத்தில் தனிமைப்படுத்தலில் இருந்தார்கள்.

தற்போது அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவுபெற்றுள் ளதால் அங்கிருந்து வெளியேறி பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்கள்.

அவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து வீரர்கள் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை இலங்கையிலிருந்து சென்ற இங்கிலாந்து அணி வீரர்கள் ஒரு வார தனிமைப்படுத்தலின் பின்னர் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

பென் ஸ்டோக்ஸ், ஜொப்ரா ஆச்சர், ரொரி பேன்ஸ் ஆகியோர் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய உற்சாகத்துடன் இங்கிலாந்து இந்தத் தொடருக்கு தயாராகியுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரின் பின்பு டெஸ்ட் உலக சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில் விளையாடும் இரண்டு அணிகளும் உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வாய்ப்பை இந்தியா வலுவாகப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.