அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் வார்னரின் மகளுக்கு, இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி தனது டெஸ்ட் ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளார்.
ஆவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் இருபது -20 தொடர்களை வென்று உற்சாகத்துடன் நாடு திரும்பியது.
இதற்கிடையே தனது மனைவியின் பிரசவத்திற்காக முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திருப்பினார் விராட்கோஹ்லி.
சமீபத்தில் டேவிட் வார்னரின் மனைவி கேண்டிஸ் சிட்னி வானொலி நிலையத்துக்குப் பேட்டி அளித்தார். இதில் தனது மகள் விராட் கோஹ்லியின் தீவிர ரசிகை என கூறியிருந்தார்.
இதை அறிந்த விராட் கோஹ்லி தனது டெஸ்ட் ஜெர்சியை வார்னரின் மகள் இண்டிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
மேலும் ஜேர்சியை அணிந்து கொண்டு சிரித்த படி இருக்கும் தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் டேவிட் வார்னர்.
”இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நாங்கள் தோல்வி அடைந்தாலும் விராட் கோஹ்லி எனது மகளுக்குக் கொடுத்த பரிசை நான் ஞாபகமாக வைத்திருக்கிறேன். உங்கள் ஜெர்சியை கொடுத்தமைக்கு நன்றி அந்த ஜேர்சி இண்டிக்கு மிகவும் பிடித்துள்ளது” என வார்னர் தெரிவித்துள்ளார்.