ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால ஒளிபரப்பு அலைவரிசை விவகாரங்கள் மற்றும் உள்ளக அறிக்கை விடயங்களைக் கொண்டே இதற்கு முன்னரும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, பெப்ரவரி 12 ஆம் திகதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோப் குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதுடன், இலங்கையில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய விசேட கணக்காய்வு அறிக்கை பரிசீலிக்கப்படவுள்ளது.
கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை மீள் குடியேற்றும் வேலைத்திட்டத்தின் முன்னேற்ற பகுப்பாய்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை இலங்கைக்கு பிளாஸ்டிக் இறக்குமதி செய்வதை முகாமை செய்தல் மற்றும் இலங்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை பெப்ரவரி 26 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.