சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையை அறிவித்துள்ளது. இதில் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறார்.
விராத் கோஹ்லி வெளிப்படுத்திய ஆற்றல்களுக்கு அமைவாக 870 புள்ளிகள் கிடைத்துள்ளன. மற்றொரு இந்திய வீரரான ரோஹித் சர்மா இரண்டாமிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலிய விஜயம் உட்பட பல தொடர்களை காயம் காரணமாக இழந்திருந்தாலும் ரோஹித் சர்மாவுக்கு 842 புள்ளிகள் கிடைத்துள்ளன.
பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் 791 புள்ளிகளுடன் தொடர்ந்தும் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.