இலங்கை சர்வதேச இருபது 20 அணியின் புதிய தலைவராக இளம் வீரரான தசுன் ஸானக நியமிக்கப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அணித்தலைவர் லசித் மாலிங்க சமீப காலமாக போட்டிகள் எதிலும் பங்கேற்காததே அதற்கு காரணம்.
இலங்கை அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு விஜயம் செய்து கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த குழாத்தில் பெரும்பாலும் லசித் மாலிங்க இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல், எல்.பி.எல் தொடர்களிலும் பங்கேற்கவில்லை. அத்துடன் தற்போது அவர் ஐ.பி.எல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் லசித் மாலிங்க விளையாடாதிருப்பதால் அவருடைய அனுபவங்களும் குன்றிப் போயிருக்கும் என தெரிவுக்குழு கூறுகின்றது. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் விஜயத்தில் தசுன் ஸானக அணித்தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.