இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தெரிவுக்குழுவை நியமித்தல் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அவர் தமது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
தேசிய மற்றும் மாகாண மட்ட போட்டிகளை நடத்துதல், வீரர்களின் ஒழுக்கம் மற்றும் உடற்தகுதிக்கு முன்னுரிமையளித்தல், திறன் அடிப்படையில் வீரர்களின் ஒப்பந்தங்களை மேற்கொள்ளல் மற்றும் பிரதான பயிற்றுவிப்பாளருக்கு உதவியளிக்கும் வகையில், பணிப்பாளர்களையும், ஆலோசகர்களையும் நியமித்தல் ஆகிய தீர்மானங்களும் இந்தக் கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் அதிகாரிகள், பிரதான பயிற்றுவிப்பாளர், தேசிய விளையாட்டு சபை அதிகாரிகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.