July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.சி.சியின் ஒருநாள் தரவரிசையில் பங்களாதேஷ் வீரர்கள் முன்னேற்றம்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் வெளியிட்டுள்ளது. இதில் நியூஸிலாந்தின் ட்ரென்ட் பௌல்ட் 722 புள்ளிகளுடன் முதலிடத்தை வகிக்கிறார்.

பங்களாதேஷின் முஜிர் ரஹ்மான் 708 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா 700 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறார்.

9 இடங்கள் முன்னேறியுள்ள மெஹிடி ஹசான் மிராஜ் நான்காமிடத்தைப் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் ஓரிடம் பின்தள்ளப்பட்டு ஐந்தாமிடத்தைப் பெற்றுள்ளார்.

தென் ஆபிரிக்காவின் கொகிசோ ரபாடா ஐந்தாமிடத்திலிருந்து ஆறாமிடத்துக்கும், அவுஸ்திரேலியாவின் ஜொஸ் ஹசல்வூட் ஆறாமிடத்திலிருந்து ஏழாமிடத்திற்கும் பின்தள்ளப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷின் முஸ்டபுகுர் ரஹ்மான் 11 இடங்கள் முன்னேறி எட்டாமிடத்திலும், பாகிஸ்தானின் மொஹமட் அமீர் ஒன்பதாமிடத்திலும் உள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் பெட் கமின்ஸ் 2 இடங்கள் பின்தள்ளப்பட்டு 10 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.