January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.சி.சியின் மாதாந்த விருது அறிமுகம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் வருடாந்தம் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை, நடுவர், பயிற்றுநர் ஆகிய விருதுகளை வழங்குகின்றமை யாவரும் அறிந்தது.

எனினும், அதன் அடுத்த கட்டமாக மாதாந்தம் சிறந்த கிரிக்கெட் வீரரை தெரிவுசெய்து கௌரவிக்கவும் ஐ.சி.சி தயாராகியுள்ளது.

மாதாந்தம் நடைபெறும் போட்டிகளில் ஆற்றலை வெளிப்படுத்திய சிறந்த வீரர்கள் விருதுக்கு தெரிவுசெய்யப்படுவார்கள். மாதத்தின் அதிசிறந்த வீரர் என இந்த விருது பெயரிடப்பட்டுள்ளது.

ஓரிரு தொடர்களில் பிரகாசித்துவிட்டு காயம், ஓய்வினால் போட்டிகளை இழக்கும் வீரர்கள் வருடாந்த விருதில் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. அத்தகைய வீரர்களுக்கு இனிமேல் அநீதி இழைக்கப்படாமல் மாதாந்த விருதின் மூலம் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.