அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் அணி முழுமையாக வெற்றிகொண்டது. மூன்றாவதும், இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 35 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ஓட்டங்களைப் பெற்றது.
அணித்தலைவர் அஸ்கார் ஆப்கான் 41 ஓட்டங்களையும், குலபின் நபி 36 ஓட்டங்களையும், மொஹ்மட் நபி 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சாளரான ரஸீட் கான் 48 ஓட்டங்களைப் பெற்றார்.
கிரெய்க் யங், சிமி சிங் ஆகியோர் தலா 3 விக்கொட்டுகளை வீழ்த்தினர்.
வெற்றி இலக்கான 267 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய அயர்லாந்து அணியால் 47.1 ஓவர்களில் 230 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. அதற்குள் சகல விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டன.
என்றாலும் போல் ஸ்டேர்லிங் 118 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை மாற்றினார். 119 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகளை பெற்றார்.
ஹெரி டெக்டர் 24 ஓட்டங்களையும், லோகர்ன் டகர் 22 ஓட்டங்களையும், சிமி சிங் 20 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றனர்.
அபாரமாகப் பந்துவீசிய ரஸிட் கான் 9 ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரஸீட் கானும் தொடரின் சிறந்த வீரராக போல் ஸ்ரேலிங்கும் தெரிவாகினர்.