file photo: Twitter/ Chelsea FC
கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற செல்சி மற்றும் லுடென் அணிக்கிடையிலான எப்ஏ கிண்ண கால்பந்தாட்டப் போட்டியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
செல்சி அணி கடைசி எட்டு பிரிமியர் லீக் போட்டிகளில் இரண்டு போட்டிகளையே வெற்றிகொண்டுள்ளதோடு, பிரிமியர் லீக் தரவரிசையில் ஒன்பதாவது இடம் வரை பின்நோக்கிச் சென்றுள்ளது.
செல்சி அணியின் மந்தமான விளையாட்டுப் போக்கு காரணமாகவே ப்ரேங்க் லெம்பார்ட் முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
லெம்பார்ட் செல்சி கழக முகாமையாளர் பதவிக்காக இரண்டு வருட ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த நிலையிலேயே, இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார்.
லெம்பார்ட் ஒரு கால்பந்தாட்ட வீரராக செல்சி அணிக்குப் பல கிண்ணங்களையும் வென்றுகொடுத்துள்ள நிலையில், அணி முகாமையாளராக பிரகாசிக்கத் தவறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.