அவுஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஈட்டிய வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் தொடரின் வெற்றிக்கான அனைத்து பெருமையும் ராகுல் ட்ராவிட்டையே சாரும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இதனை ராகுல் ட்ராவிட் பெருந்தன்மையுடன் மறுத்துள்ளார்.
அது வீரர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி, பாராட்டுக்கள் எனக்குரியவை அல்ல. அந்த இளம் வீரர்களையே சாரும் என்றும் ட்ராவிட் கூறியுள்ளார்.
ராகுல் ட்ராவிட் 2016 முதல் 2019 வரை இந்திய 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் இந்திய ஏ அணியின் பயிற்றுநராக செயற்பட்டிருந்தார். இவரது சிறப்பான பயிற்சியின் காரணமாகவே இளம் வீரர்கள் உரிய விதத்தில் ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
எனவே அனைத்து பாராட்டுகளுமே ராகுல் ட்ராவிட்டுக்கு உரியவை என இந்திய முன்னாள் வீரர்கள் கூறுகிறார்கள்.
ஆனாலும், அனைத்து மகிழ்ச்சிக்கும், புகழுக்கும் இந்திய இளம் வீரர்கள் உரியவர்கள். அவர்களுக்கே அத்தனை பாராட்டுகளும் போய் சேர வேண்டும் என ட்ராவிட் குறிப்பிட்டுள்ளார்.