July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரேஸில் விமான விபத்தில் 4 கால்பந்து வீரர்கள் பலி

பிரேஸிலில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கால்பந்தாட்ட வீரர்கள் நால்வரும், பால்மோஸ் கால்பந்தாட்ட கழக தலைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பால்மஸ் நகரிலிருந்து கோயானியா நகர் நோக்கி புறப்பட்ட சிறிய ரக விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக குறிப்பிடப்படுகிறது.

சம்பவத்தில் பால்மோஸ் கால்பந்தாட்ட கழகத்தின் தலைவரான லூகாஸ் மெய்ரா, கால்பந்தாட்ட வீரர்களான லூகாஸ் ரொஸ்டெஸ், குயில்லர் மோ, ரொனால்ட் , மார்க்கஸ் ஆகியோரே பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.