July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை உறுதிசெய்தது இலங்கை அணி

2021 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கை அணி இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணமொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பான செய்தி அறிக்கையை இலங்கை கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ளது.

இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக இருபது 20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி இங்கிலாந்துடன் மூன்று இருபது 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு இருபது 20 போட்டிகளும் கார்டிப் மைதானத்திலும் மூன்றாவது போட்டி சவுதம்ப்டன் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி டர்ஹமிலும் இரண்டாவது போட்டி ஓவல் மைதானத்திலும் இறுதிப் போட்டி பிரிஸ்டல் மைதானத்திலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அணி எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி இங்கிலாந்தை நோக்கிப் புறப்படவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபையின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.