இலங்கை எதிர் இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று, இங்கிலாந்து அணி முதலாவது இன்னிங்ஸ் 344 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
நேற்று இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 339 ஓட்டங்களுடன் மூன்றாவது நாளை நிறைவு செய்ததோடு, இன்று மேலதிகமாக 5 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து, 66 ஓட்டங்களைப் பெற்றுள்ள நிலையில், 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் முதல் எவருமே பிரகாசிக்கத் தவறியதால், இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி தடுமாறுகின்றது.
முதலாவது இன்னிங்ஸில் 381 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட இலங்கை அணி, 37 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
மதிய போசன இடைவேளைக்கு போட்டி நிறுத்தப்படும் வரை, இலங்கை 104 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
Sri Lanka in all sorts of trouble as they head into lunch with a lead of just 104 runs. It's going to be a tough uphill battle in the sessions to come. #SLvsENG2021 pic.twitter.com/UHvCVbpn6g
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) January 25, 2021