July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அன்டர்சன் சாதனை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அன்டர்சன் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக தடவைகள் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையே அது.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது டெஸ்ட் அரங்கில் அவர் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 30 ஆவது சந்தர்ப்பமாகும்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் ஒன்றில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர்களில் ஜேம்ஸ் அன்டர்சனுக்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது.

அவுஸ்திரேலிய வீரரான கிளென் மெக்ராத் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருந்தார். அந்தப் பட்டியலில் தற்போது ஜேம்ஸ் அன்டர்சன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 5 அல்லது அதிக மேற்பட்ட விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களில் நியூஸிலாந்தின் ரிச்சரட் எட்லி முதலிடம் வகிக்கிறார். அவர் 36 தடவைகள் இந்த ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் முதலிடம் வகிக்கிறார். முரளிதரன் 67 தடவைகள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

ஷேன் வோர்ன் 37 தடவைகள் 5 விக்கெட் பெறுதியை பதிவுசெய்து இரண்டாமிடத்திலும், ரிச்சர்ட் அட்லி 36 தடவைகளுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர். இதில் இலங்கையின் ரங்கன ஹேரத் ஐந்தாமிடத்திலும் ஜேம்ஸ் அன்டர்சன் ஆறாமிடத்திலும் உள்ளனர்.