
Football.
இங்கிலாந்தின் எப்.ஏ கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் புகழ்பெற்ற ஆர்சனல் கழக அணி அதிர்ச்சி தோல்வியுடன் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதற்கான போட்டியில் சவுத்தம்டன் கழக அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் எப்.ஏ கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் ஆர்சனல் மற்றும் சவுத்தம்டன் கழக அணிகள் நான்காம் சுற்றுப் போட்டி ஒன்றில் மோதின. நொக் அவுட் விதிமுறையிலான இந்தப் போட்டியில் இரண்டு அணிகளின் வீரர்களும் ஆரம்பத்தில் சவாலாக விளையாடினார்கள்.
எனினும், முதல் பாதியில் 24 ஆவது நிமிடத்தில் ஆர்சனல் அணி வீரர் கெப்ரியல் இழைத்த தவிறினால் ஓன்கோல் பதிவானது. இதனால் சவுத்தெம்டன் கழக அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முதல் பாதியில் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் கோலடிப்பதற்கு ஆர்சனல் கழக அணி வீரர்கள் முயற்சித்த போதிலும் அவர்களால் அதனை அடைய முடியவில்லை.
இறுதியில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் எனும் கோல் வித்தியாசத்தில் சவுத்தம்டன் கழக அணி வியத்தகு வெற்றியை ஈட்டியது.
இதற்கமைய ஆர்சனல் கழக அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட சவுத்தம்டன் கழக அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பைப் பெற்றது. ஆர்சனல் அணியின் இந்த தோல்வி இங்கிலாந்து கால்பந்தாட்ட ரசிகர்களிடத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.