June 16, 2025 20:34:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடராஜன் ஒரு ஜாம்பவான்; வோனர்

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் தமிழக வீரரான நடராஜனை ஒரு ஜாம்பவான் என்று அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோனர் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோவொன்றை வெளியிட்டு நடராஜனுக்கு தமது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் இருபது 20 போட்டிகளில் டேவிட் வோனர் தலைமையிலான சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்காக நடராஜன் விளையாடினார். இந்தத் தொடரில் அவரது அபார திறமையைக் கண்டு தாம் வியந்துபோனதாக டேவிட் வோனர் குறிப்பிட்டுள்ளார்.

நடராஜன் ஒரு திறமையான வீரர். எந்தத் தருணத்தில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்ற தெளிவும், அனுபவமும் அவருக்கு இருக்கின்றது. அவருக்கு அணித்தலைவராக செயற்பட்டமை எனக்கு பெருமை. அவருடன் களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நான் பழகியுள்ளேன். மிகுந்த நற்பண்புகளைக் கொண்ட மனிதர் அவர். நிச்சயம் அவர் இந்தமுறை ஐ.பி.எல்லில் மேலும் சாதிப்பார் என வோனர் கூறியுள்ளார்.