July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 381 ஓட்டங்களுடன் ஆட்டமிழப்பு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணியினர் 381 ஓட்டங்களை பெற்று போட்டியை மிகவும் வலுப்படுத்தி உள்ளனர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட முதலில் களமிறங்கிய இலங்கை அணி பெரும் சவால்களுக்கு மத்தியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 381 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இதில், இலங்கை அணி சார்பில் துடுப்பெடுத்தாடிய அஞ்சலோ மெத்தியுஸ் 110 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 92 ஓட்டங்களையும் தில்ருவன் பெரேரா 67 ஓட்டங்களையும் மற்றும் தினேஷ் சந்திமல் 52 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் 6 விக்கெட்களும் மற்றும் மார்க் வுட் 3 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்த போட்டியில் இலங்கை வெற்றிப்பெற்றால் மட்டுமே தொடரை தக்கவைத்துக் கொள்ள முடியும். எனவே இந்த போட்டி இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானதாகும்.

26 ஆண்டுகளில் பின் இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டியில்  ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளும் வேகப்பந்து வீச்சாளர்களினால் வீழ்த்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கடைசியாக 1994 ல் கண்டியில் நடந்த போட்டியில், வசீம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் இணைந்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தயிருந்தமை குறிப்பிடத்தக்கது.