January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: ரசிகர்களை ஏமாற்றிய பிசிசிஐ

சென்னையில் சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பிசிசிஜ) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி பெப்ரவரி மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அங்கு இரு அணிகளும் நான்கு டெஸ்ட் , ஜந்து  இருபது 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன.

இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னையில் சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

கொரோனா தொற்றுக்குப் பின் இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

மத்திய அரசு திறந்தவெளி மைதானங்களில் 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், ரசிகர்கள் இப்போட்டியை காண ஆவலாக இருந்தனர்.

இந்நிலையில் இவ்வறிவிப்பானது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று முன்தடுப்பு நடவடிக்கை காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தமிழக கிரிக்கெட் செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி தெரிவித்துள்ளார்.

இரு அணி வீரர்களும் எதிர்வரும் 27 ஆம் திகதி சென்னை செல்லவுள்ள நிலையில், அங்கு  அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய  கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.