
அவுஸ்திரேலிய கிரிக்கெட் விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்பியுள்ளது.
அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு அவரவரின் சொந்த ஊர்களில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக கிரிக்கெட் வீரரான நடராஜன் சேலத்தின் சின்னம்பகட்டி கிராமத்தை சேர்ந்தவராவார். வலைப் பயிற்சிக்கு பந்துவீசப் போன அவர் மூன்றுவகை கிரிக்கெட் போட்டிகளிலும் சர்வதேச அறிமுகத்தைப் பெற்றார்.
அத்துடன், ஆற்றலை வெளிப்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உரிய பங்களிப்பை வழங்கினார். இந்த சிறப்புடன் நாடு திரும்பிய அவர் சேலத்திலிருந்து ஊர் திரும்பினார். கொரோனா அபாய நிலைமை காரணமாக நடராஜனை நெருங்குவதற்கு இடமளிக்கப்படவில்லை.
ஆனாலும், இந்து சமய கலாசார பண்பாடுகளுடன் மேளமும், தாளமும் முழங்க நடராஜன் மலர்மாலை அணிவித்து ஊர்மக்கள் முன்பாக பவனியாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்தத் தொடரில் அவர் மொத்தமாக 13 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.