January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய விஜயத்துக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் விஜயத்தில் பங்கேற்கும் இங்கிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோ ரூட் தலைமையிலான இந்தக் குழாத்தில் 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஜொப்ரா ஆச்சர்,மொயீன் அலி,ஜேம்ஸ் அன்டர்சன்,டொம் பெஸ், ஸ்டுவர்ட் பிரொட்,ரொரி பேர்ன்ஸ்,ஜோஸ் பட்லர்,பென் ஸ்டோக்ஸ், ஜெக் லீச், கிறிஸ் வோக்ஸ் ஆகிய முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

புதுமுக வீரர்களான ஜாக் கிராவ்லி,பென் போக்ஸ்,டொன் லோரன்ஸ்,டொம் சிப்லி,ஒல்லி ஸ்ரேபன்ஸ் ஆகியோருக்கும் இங்கிலாந்து குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி இந்த விஜயத்தில் நான்கு டெஸ்ட்,3 சர்வதேச ஒருநாள்,5 சர்வதேச இருபது 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னையில் நடைபெறவுள்ளன.முதல் போட்டி பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், சுமார் ஒன்றரை மாத காலத்துக்கு இந்தக் கிரிக்கெட் தொடர் நீடிக்கவுள்ளது.