
file photo: Twitter/ ATP Tour
ஏடிபி கிண்ண டென்னிஸ் போட்டிகளை சிங்கப்பூரில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள கொவிட்- 19 விதிமுறைகளுக்கு அமையவே ஏடிபி 250 டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை ஏடிபி கிண்ண டென்னிஸ் போட்டிகளை சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளிலும் நடத்த ஒற்றை ஆண்டு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயால் குறைந்து போயுள்ள விளையாட்டு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் முடிவடைந்ததும், பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை ஏடிபி 250 டென்னிஸ் போட்டிகள் சிங்கப்பூரின் ஓசிபிசி மைதானத்தில் நடைபெறவுள்ளன.