July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அவுஸ்திரேலியாவுடனான வெற்றியை அதிகமாக கொண்டாடாதீர்கள்’

அவுஸ்திரேலிய மண்ணில் பெற்ற டெஸ்ட் வெற்றியை அதிகமாகக் கொண்டாடாதீர்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், விமர்சகருமான கெவின் பீற்றர்சன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணி இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்து விளையாடவுள்ளதுடன் அது குறித்து மனதில் வைத்தே மேற்படி கருத்தை கெவின் பீற்றர்சன் வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி உங்களை உங்கள் மண்ணில் வீழ்த்த காத்திருக்கிறது. அதனை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் என்றும் பீற்றர்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கிலாந்து அணி இலங்கையுடனான தொடர் முடிந்தவுடன் இந்தியாவுக்கு பயணமாகவுள்ளது. அங்கு 4 டெஸ்ட், 3 சர்வதேச ஒருநாள், 5 சர்வதேச இருபது 20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

தொடரின் முதல் அம்சமாக முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.