January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பணிப்பாளராக சங்கக்கார நியமனம்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பணிப்பாளராக இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. இதில் போட்டியிடும் 8 அணிகளில் ஒன்றாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி காணப்படுகின்றது.

அணிகளுக்கான வீரர்களை ஏலத்தில் வாங்கும் செயற்பாடு அடுத்த வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதுவரை காலமும் அணியில் இடம்பெற்றுவந்த வீரர்களை விடுவிக்கும் இறுதிநாள் செவ்வாய்க்கிழமையுடன் (20)முடிவடைந்தது.

அதற்கமைய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இளம் வீரரான சஞ்சு செம்ஸன் அணித்தலைமை பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பிரதம பணிப்பாளராக குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.