Photo: BCCI/ Delhi Capitals
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லோகேஸ் ராகுல் தலைமையிலான் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிகள் மோதிய இந்தியன் பிரிமியர் லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் முதலில் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது.
அதனால் சூப்பர் ஓவர் வீசப்பட்டு வெற்றி அணி தீர்மானிக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்த டெல்லி கேபிடல்ஸ் எதிர்பார்த்ததைவிட மோசமாக விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே தடுமாற்றத்துக்குள்ளானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸிகர் தவான் இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து பிரித்திவ் ஸா 5 ஓட்டங்களுடனும், ஸிம்ரேன் எட்மயர் 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, டெல்லி கேபிடல்ஸ் அணி 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து கடும் பின்னடைவுக்குள்ளானது.எனினும், அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஸப் பாண்ட் ஜோடி 10 ஓவர்களில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது.
8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள்
ஸ்ரேயாஸ் ஐயர் 32 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 39 ஓட்டங்களையும், ரிஸப் பாண்ட் 29 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்வரிசை வீரர்கள் பெரிதாக பிரகாசிக்காத போதிலும் தனி ஒருவராக பொறுப்புடன் அடிய மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 21 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்களை விளாசி டெல்லி அணியை கௌரவமான நிலைக்கு கொண்டுவந்தார். டெல்லி கெபிடெல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் கிறிழஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலகுவான இலக்கான 158 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி சார்பில் அணித்தலைவர் லோகேஸ் ராகுல் 21 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். எஞ்சிய வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும் மயனக் அகர்வால் தனி ஒருவராகப் பிரகாசித்து நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடினார்.நிகோலஸ் பூரான் ஓட்டமின்றியும், கிளென் மெக்ஸ்வெல் ஓர் ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
மயன்க் அகர்வால் 60 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்களைப் பெற்று வெற்றியின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினார். ஆனாலும். அதன் பின்பு அபாரமாகப் பந்துவீசிய டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் போட்டி சமநிலையில் முடிவடைய வழிசெய்தார்கள். கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியும் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்களைப் பெற்றது.
வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டதுடன் அதில் முதலில் துடுப்பெடுத்த டெல்லி அணி 3 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 2 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
இந்தத் தொடரில் தனது முதலாவது ஓவரில் அதாவது ஆட்டத்தின் 6வது ஓவரில் டெல்லி அணியின் அஷ்வின், கருண் நாயர் மற்றும் நிக்கோலாஸ் பூரனை ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். மேக்ஸ்வெல் அடித்த கடைசி பந்தை ‘டைவ்’ அடித்து தடுக்க முயன்ற போது, அஷ்வினின் இடது கை தோள்பட்டை காயமடைந்தது. மைதானத்தை விட்டு வெளியேறினார்.
தோள்பட்டை விலகியதாக கூறப்படுவதால், தொடரில் இருந்து அவர் விலக நேரிடும் என்றே கூறப்பட்டது. ஆனால், ஆரம்பத்தில் நினைத்ததைப் போல அவரது காயம் ஆபத்தானதாக இல்லை என்றும் மருத்துவ அறிவுரைக்காக டெல்லி அணி காத்திருப்பதாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.