July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடராஜனிடம் வெற்றிக்கிண்ணத்தை கொடுத்த ரஹானே

தமிழக வீரரான நடராஜன் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றவராவார். இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு வலைப்பயிற்சியின் போது பந்துவீசவென இணைத்துக்கொள்ளப்பட்ட அவர் இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.

அணியின் முக்கிய வீரர்கள் உபாதைக்குள்ளானதால் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. சர்வதேச இருபது20, சர்வதேச ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று அம்சங்களிலுமே அவருக்கு அறிமுகம் கிடைத்தது.

அந்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்திக்கொண்ட நடராஜன், இந்திய அணியின் வெற்றியிலும் அதிக பங்கெடுத்துக்கொண்டார். சர்வதேச இருபது 20 தொடரில் இந்தியா வெற்றிபெறுவதற்கு நடராஜனின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது.

டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றிபெற்ற பின்னர் வெற்றிக் கிண்ணம் கைக்கு வந்ததும் அதனை அப்படியே ஏந்தி நடராஜனிடம் கொடுத்த ரஹானே, அவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இதனிடையே ரவிச்சந்திரன் அஸ்வின் ஊடகவியலாளர் போன்று எழுப்பிய கேள்விக்கு நடராஜன் தமிழில் பதிலளித்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தார்.