July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிக டெஸ்ட் வெற்றி; ஜோ ரூட்டுக்கு இரண்டாம் இடம்

இங்கிலாந்துக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த அணித்தலைவர்கள் பட்டியலில் ஜோ ரூட் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றதன் மூலம் அவர் இந்த சிறப்பைப் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற அணித்தலைவராக மைக்கல் வோகன் திகழ்கிறார். அவர் இங்கிலாந்து அணியை 51 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தி 26 வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார். அவரது தலைமையில் 11 தோல்விகளை இங்கிலாந்து சந்தித்துள்ளது.

இரண்டாமிடத்தைப் பிடித்துள்ள ஜோ ரூட் 45 போட்டிகளில் 24 வெற்றிகளைப் பெற்றுள்ளதுடன் 15 தோல்விகளை எதிர்கொண்டுள்ளார்.

அன்ரூ ஸ்ரோவ்ஸ் தலைமையில் 50 போட்டிகளில் 24 வெற்றிகள், 11 தோல்விகளையும், அலிஸ்டயார் குக் தலைமையில் 59 போட்டிகளில் 24 வெற்றிகள், 22 தோல்விகளையும் இங்கிலாந்து அணி பெற்றுள்ளது.

இதற்கமைய அன்ரூ ஸ்ரோவ்ஸ், அலிஸ்டயார் குக் ஆகியோரின் 24 டெஸ்ட் வெற்றிகள் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் மற்றும் இந்தியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளதால் ஜோ ரூட் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற இங்கிலாந்து அணித்தலைவராக சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது.